/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உடல்நலம் பாதித்த சிறுவன் கழிப்பறையில் விழுந்து பலி
/
உடல்நலம் பாதித்த சிறுவன் கழிப்பறையில் விழுந்து பலி
உடல்நலம் பாதித்த சிறுவன் கழிப்பறையில் விழுந்து பலி
உடல்நலம் பாதித்த சிறுவன் கழிப்பறையில் விழுந்து பலி
ADDED : டிச 20, 2024 12:31 AM

தரமணி, தரமணி, எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் அருண்குமார், 46. தனியார் மருந்தக நிறுவனத்தில், விற்பனையாளராக பணியாற்றுகிறார். இவரது மனைவி, பத்து ஆண்டுகளுக்கு முன், கேன்சர் பாதிப்பால் இறந்தார்.
இவர்கள் மகன் ரோஹித், 15. பத்தாம் வகுப்பு படித்து வந்தார். சில நாட்களாக, காய்ச்சல், சளி, வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம், மாத்திரை வாங்கி கொடுத்துவிட்டு, அருண்குமார் வேலைக்கு சென்றார். மாலை போன் செய்த போது, ரோகித் பதிலளிக்கவில்லை.
அருகில் வசிக்கும் ரோகித்தின் நண்பர் ஜீவாவை தொடர்பு கொண்டு, வீட்டுக்கு சென்று பார்க்க கூறியுள்ளார். ஜீவா வந்து பார்த்தபோது, கழிப்பறையில் தலைகுப்புற மயங்கிய நிலையில், ரோஹித் கிடந்தார்.
அருகில் உள்ளவர்கள் உதவியுடன், ஆம்புலன்சில் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, ரோஹித் உயிரிழந்தார். தரமணி போலீசார், சிறுவன் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்கு அனுப்பினர்.
சுகாதார அதிகாரிகள், வீட்டில் உள்ள குடிநீரை பரிசோதனைக்கு அனுப்பினர்.