/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தெரு விளக்கு 'அவுட்' கும்மிருட்டான சாலை
/
தெரு விளக்கு 'அவுட்' கும்மிருட்டான சாலை
ADDED : பிப் 06, 2024 12:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, மணலி - எம்.எப்.எல்., முதல் முருகப்பா நகர் சந்திப்பு வரையிலான, 7 கி.மீ., துார மணலி விரைவு சாலையை தினமும், ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயன்படுத்தி வருகின்றன.
சென்னை துறைமுகம் நோக்கி செல்லும், கன்டெய்னர் மற்றும் டிரெய்லர் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு இச்சாலையே பிரதானம்.
இந்நிலையில், மணலி விரைவு சாலையின் பெரும்பாலான இடங்களில், தெருவிளக்குகள் எரியாமல் உள்ளன. இரவு நேரங்களில் கும்மிருட்டாக இருப்பதால், பைக், ஸ்கூட்டர் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, தெருவிளக்குகளை முறையாக சரிபார்த்து பராமரிக்க வேண்டும்.
- எம்.குமரேசன்,
திருவொற்றியூர்.

