ADDED : அக் 06, 2024 12:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவொற்றியூர், திருவொற்றியூர், அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் பாட்ஷா, 40; ஆட்டோ மெக்கானிக். திருமணமாகவில்லை. தினமும் மது அருந்தி, வீட்டின் எதிரே இருக்கும் ரயில்வே குட்டையின் மண் திட்டு மீது படுத்துறங்குவது வழக்கம்.
வழக்கம்போல, நேற்று முன்தினம் நள்ளிரவு 12:00 மணி, குட்டையின் மண் திட்டு மீது துாங்கினார். காலையில், பாட்ஷாவை காணவில்லை. வேலைக்கு சென்றிருப்பார் என, யாரும் அவரை தேடவில்லை.
இந்த நிலையில், நேற்று மாலை அவரது உடல் குட்டையில் மிதந்தது. உடலை மீட்ட சாத்தாங்காடு போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், 'மதுபோதையில் குட்டையில் மூழ்கி இறந்திருக்கலாம்' என, தெரிய வந்துள்ளது.