/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வழிதவறி வந்த டிப்பர் லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து
/
வழிதவறி வந்த டிப்பர் லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து
வழிதவறி வந்த டிப்பர் லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து
வழிதவறி வந்த டிப்பர் லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து
ADDED : செப் 04, 2025 03:31 AM

திருவேற்காடு, திருவள்ளூரில் இருந்து 'எம் - சாண்ட்' ஏற்றி வந்த டிப்பர் லாரி, சுந்தர சோழபுரம் ஏரிக்கரையில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
திருவேற்காடு, கோலடி ஏரி ஓட்டி, சுந்தர சோழபுரம் ஏரிக்கரை சாலை உள்ளது. பத்தடி அகலம் உடைய இந்த சாலை, பல மாதங்களாக குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த சாலையில் இலகு ரக வாகனங்கள் மட்டுமே செல்ல முடியும்.
இந்நிலையில், திருவள்ளூரில் இருந்து கோலடி பகுதிக்கு, 4 யூனிட் 'எம் - சாண்ட்' ஏற்றிக் கொண்டு, நேற்று காலை டிப்பர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. லாரியை திண்டிவனத்தைச் சேர்ந்த, வீர விஜயன், 35 என்பவர் ஓட்டி வந்தார்.
சுந்தர சோழபுரம் சாலை வழியாக சென்ற லாரி, வழிதவறி ஏரிக்கரை சாலையில் சென்றது. அப்போது, திடீரென இடது புறமாக 10 அடி பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் வீர விஜயன் காயமின்றி உயிர் தப்பினார். பின், பல மணி நேர போராட்டத்திற்கு பின் 'கிரேன்' உதவியுடன் லாரி மீட்கப்பட்டது.
விபத்தை வேடிக்கை பார்த்து கொண்டு எதிரில் வந்த 'மாருதி எர்டிகா' கார், சாலையோர பள்ளத்தில் இறங்கியது. இதனால் அங்கும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின், கிரேன் மூலம் கார் மீட்கப்பட்டது.
ஏரிக்கரை சாலையில், கனரக வாகனம் செல்லாதவாறு தடுப்புகள் அமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.