/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டூ - வீலரில் சென்றவர் டிப்பர் லாரியில் சிக்கி பலி
/
டூ - வீலரில் சென்றவர் டிப்பர் லாரியில் சிக்கி பலி
ADDED : பிப் 16, 2024 12:24 AM
மணலிபுதுநகர், எர்ணாவூர், ஜெய்ஹிந்த நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார், 53, சோப் ஆயில் விற்பனை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, தன் நண்பரை பார்க்க, இருசக்கர வாகனத்தில் விச்சூருக்கு சென்றார்.
அப்போது, பொன்னேரி நெடுஞ்சாலை, ஈச்சங்குழி சந்திப்பு அருகே சென்ற போது, அவரை முந்திச் செல்ல முயன்ற இருசக்கர வாகனம், விஜயகுமார் மீது உரசியது.
இதில், நிலைதடுமாறி கீழே விழுந்தவர், அருகே சென்று கொண்டிருந்த டிப்பர் லாரியில் சிக்கி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து, தகவலறிந்த செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மேலும், இதில் தொடர்புடைய டிப்பர் லாரி ஓட்டுனரான, ரெட்ஹில்ஸ், காவாங்கரையைச் சேர்ந்த சந்திரகாந்த், 48, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.