/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
துணை முதல்வருக்கு உற்சாக வரவேற்பு
/
துணை முதல்வருக்கு உற்சாக வரவேற்பு
ADDED : ஜூலை 09, 2025 01:18 AM
குளித்தலை, கரூரில், இன்று அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் துணை முதல்வர் உதயநிதி பங்கேற்கிறார். அதற்காக நேற்று இரவு, 8:30 மணியளவில் குளித்தலைக்கு வந்த துணை முதல்வர் உதயநிதிக்கு, மாஜி அமைச்சரும், மாவட்ட செயலாளருமான செந்தில்பாலாஜி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
குளித்தலை எம்.எல்.ஏ.. மாணிக்கம், துணை முதல்வர் உதயநிதியை பூச்செண்டு மற்றும் நினைவு பரிசு வழங்கி வரவேற்றார். முன்னாள் மாவட்ட பஞ்., துணைத்தலைவர் தேன்மொழி, ஒன்றிய செயலாளர்கள் சந்திரன், தியாகராஜன், அண்ணாதுரை, மாநில வர்த்தக அணி துணை செயலாளர் பல்லவிராஜா, நகராட்சி தலைவர் சகுந்தலா மற்றும் எம்.எல்.ஏ..க்கள், ஒன்றிய செயலாளர்கள், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்குளித்தலைக்கு வந்த தமிழக துணை முதல்வர் உதயநிதிக்கு எம்.எல்.ஏ., மாணிக்கம் நினைவு பரிசு வழங்கி வரவேற்றார்.
பாளர்கள் கலந்து கொண்டனர்.
துணை முதல்வர் உதயநிதி, பஸ் ஸ்டாண்டில் இருந்து திறந்த வாகனத்தில் சுங்ககேட் வரை நின்றவாறு சென்றார். அவருக்கு தி.மு.க.,வினர் சால்வை, பூங்கொத்து, மாலை அணிவித்து வரவேற்றனர்.