ADDED : பிப் 08, 2024 12:33 AM
அ நிறம் | அளவு
புளியந்தோப்பு, ஓட்டேரி உள்ளிட்ட பகுதிகளில், பேருந்து பயணியர் நிழற்குடைகள் பராமரிப்பின்றி உள்ளன. குறிப்பாக, புளியந்தோப்பு ஆடுதொட்டி சாலையில் உள்ள நிழற்குடையின் கூரை உடைந்து பயனற்று கிடக்கிறது. தற்போது, ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
அதேபோல், புளியந்தோப்பு, பெரியார் நகர் அம்பேத்கர் சிலை மற்றும் புளியந்தோப்பு கிரே நகர் மற்றும் காசநோய் மருத்துவமனை அருகே உள்ள பயணியர் நிழற்குடைகளும் பராமரிப்பின்றி உள்ளன. அவற்றை சீரமைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சரவண குமார், புளியந்தோப்பு.
