/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வரவேற்பை பெற்ற 'ரீடெய்ல் எக்ஸ்போ'
/
வரவேற்பை பெற்ற 'ரீடெய்ல் எக்ஸ்போ'
ADDED : பிப் 25, 2024 12:10 AM

சென்னை, 'யூனியன் பேங்க் ஆப் இந்தியா' சார்பில் 'ரீடெய்ல்தான் - 2024' என்ற பெயரில், மெகா ரீடெய்ல் கண்காட்சி, தி.நகர், பாண்டி பஜாரில் உள்ள விஜயா மஹாலில் நேற்று துவங்கியது.
கண்காட்சியில், 30க்கும் மேற்பட்ட முன்னணி கட்டுமான நிறுவனங்கள், கார் டீலர்கள், வெளிநாடுகளில் உயர்கல்வி படிக்க ஆலோசனை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் வீடு கட்டுவதற்கு தேவையான கடன் வசதிகள் செய்து தரப்படுகிறது.
வாடிக்கையாளர்களுக்கு பிடித்த வீடுகளை தேர்வு செய்யும் வகையில், கட்டுமான நிறுவனங்கள், குடியிருப்பு திட்டங்கள் குறித்த சந்தேகங்களுக்கு யோசனைகள் வழங்குகின்றன.
இதில், குறைந்த வட்டியில், கடன்களுக்கு உடனுக்குடன் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது. மேலும் வீட்டு கடன் 'ஸ்பாட் அப்ரூவல்' வகையில், உடனடியாக கடன் வசதிகள் செய்யப்படுகின்றன.
நேற்று துவங்கிய இந்த மெகா ரீடெயில் கண்காட்சி, இன்று இரவு 7:00 மணி வரை நடக்கிறது. இதில் பங்கேற்று பயன்பெறலாம்.