/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கணவர் கண் முன்னே உடல் நசுங்கிய மனைவி
/
கணவர் கண் முன்னே உடல் நசுங்கிய மனைவி
ADDED : மார் 01, 2024 12:40 AM
மதுரவாயல், சென்னை அம்பத்துார், கள்ளிக்குப்பத்தைச் சேர்ந்தவர் வன்னியராஜன், 43. இவரது மனைவி மைதிலி, 39. இத்தம்பதி நேற்று முன்தினம் இரவு, போரூரில் உள்ள உறவினரை பார்த்துவிட்டு, பைக்கில் வீடு திரும்பினர்.
தாம்பரம் - -மதுரவாயல் புறவழிச் சாலை வழியாக போரூர் சமயபுரம் பகுதியில் வந்த போது, கனரக லாரி ஒன்று சென்றுள்ளது. சாலை குறுகலாக இருந்த நிலையில், லாரியை முந்திச் செல்ல 'ஹாரன்' அடித்தபடி தம்பதி சென்றுள்ளனர்.அப்போது, லாரியில் பைக் உரசி கீழே விழுந்த போது, மைதிலியின் கால் மீது லாரி ஏறி இறங்கியுள்ளது.
இதில், அவரது கால் உள்ளிட்ட சில பகுதிகள் நசுங்கின. உடனே, லாரி ஓட்டுனர் இறங்கி தப்பிச் சென்றார். தகவலின்படி வந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார், மைதிலியை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து, தப்பிச் சென்ற லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர்.

