/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முந்த முயன்று விபத்து பைக் ஓட்டிய வாலிபர் பலி
/
முந்த முயன்று விபத்து பைக் ஓட்டிய வாலிபர் பலி
ADDED : அக் 11, 2025 12:02 AM
காசிமேடு : கன்டெய்னர் லாரியை முந்த முயன்றபோது ஏற்பட்ட விபத்தில், பைக் ஓட்டிய வாலிபர் பலியானார்.
மணலி, விச்சூர், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் எழிலரசன், 22. தன் நண்பர் மின்னரசுடன், காசிமேடு, எஸ்.என்.செட்டி தெரு வழியாக நேற்று, இருசக்கர வாகனத்தில் சென்றார்.
அப்போது, முன்னால் சென்ற கன்டெய்னர் லாரியை முந்த முயன்று, நிலை தடுமாறி விழுந்ததில், எழிலரசன் தலை மீது லாரி ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். பின்னால் அமர்ந்திருந்த மின்னரசு, படுகாயமடைந்தார்.
வண்ணாரப்பேட்டை போலீசார், எழிலரசன் உடலை கைப்பற்றி ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர். மின்னரசுவை, சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர பிரிவில் சேர்த்த போலீசார், வழக்கு பதிவு செய்து, கன்டெய்னர் லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.