ADDED : ஜூன் 24, 2025 12:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புளியந்தோப்பு, மதுபோதையில், பெண்களை கிண்டல் செய்து மிரட்டிய ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
புளியந்தோப்பு, சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் எட்வின், 24. இவர், சாஸ்திரி நகர் எம்.எஸ்.முத்து நகர் ஆகிய பகுதிகளில் மது போதையில் பொதுமக்களை அச்சுறுத்துவதும், பெண்களை கிண்டல் செய்வதுமாக இருந்துள்ளார். இதில் சாஸ்திரி நகரைச் சேர்ந்த 21 வயது பெண்ணை கிண்டலடித்து, கத்தியை காட்டி கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார். இது குறித்த புகாரின்படி, புளியந்தோப்பு போலீசார் நேற்று எட்வினை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இவரிடமிருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.