/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
செயின் பறித்த திருடனை புரட்டியெடுத்த வாலிபர்
/
செயின் பறித்த திருடனை புரட்டியெடுத்த வாலிபர்
ADDED : டிச 15, 2024 12:14 AM
கொரட்டூர், வியாசர்பாடி, முல்லை நகரைச் சேர்ந்தவர் தனபால், 29; கார் ஷோரூம் ஊழியர்.
இவர் சொந்த ஊரான கோயம்புத்துாருக்கு சென்று, நேற்று அதிகாலை 1:30 மணிக்கு சென்னை திரும்பியுள்ளார். கொரட்டூர் 200 அடி சாலையில், நண்பர் ஆகாஷ் என்பவருக்காக காத்திருந்தார்.
அப்போது, 'ஹோண்டா ஆக்டிவா' ஸ்கூட்டர் மற்றும் யமஹா எம்.டி., 15 பைக்கில் வந்த நான்கு வாலிபர்கள், தனபாலின் 1 சவரன் செயினை பறித்து தப்பினர். அதே நேரம், அங்கு காரில் வந்த ஆகாஷுடன் சேர்ந்து, தனபால் அவர்களை காரில் விரட்டி சென்றார்.
மாதவரம் அருகே ஒருவரை மடக்கி பிடித்த தனபால், அவருக்கு தர்ம அடி கொடுத்து, கொரட்டூர் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், வியாசர்பாடியைச் சேர்ந்த சஞ்சய், 20, என தெரிந்தது.
சஞ்சய் கொடுத்த தகவலின்படி, வியாசர்பாடியைச் சேர்ந்த பிரவீன் குமார், 24, கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த கீர்த்திவாசன், 24, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.