/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மூதட்டியிடம் சில்மிஷம் வாலிபருக்கு வலை
/
மூதட்டியிடம் சில்மிஷம் வாலிபருக்கு வலை
ADDED : ஜன 19, 2025 10:10 PM
புளியந்தோப்பு:புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த 60 வயது மூதாட்டி, கடந்த 17ம் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதை அறிந்த, அதே பகுதியைச் சேர்ந்த 22 வயது வாலிபர், நள்ளிரவு 12:00 மணியளவில், மூதாட்டியின் வீட்டிற்குள் புகுந்து, பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்றுள்ளார்.
அதிர்ச்சியடைந்த மூதாட்டி கூச்சலிடவே, வாலிபர் அங்கிருந்து தப்பியுள்ளார். மேலும், நேற்று முன்தினம் மாலை வாலிபரின் உறவினர்கள், முதாட்டியிடம் தகராறு செய்ததாகவும் தெரிகிறது.
இது குறித்து மூதாட்டி, புளியந்தோப்பு மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்படி வழக்கு பதிந்து தலைமறைவாக உள்ள 22 வயது வாலிபரை தேடி வருகின்றனர்.
அவர் மீது, எம்.கே.பி., நகர், பேசின் பிரிட்ஜ், பட்டாபிராம், செங்குன்றம் மற்றும் கொடுங்கையூர் காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் உள்ளன.