/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'ஷவர்மா' சாப்பிட்டதால் இளம்பெண் பலி?
/
'ஷவர்மா' சாப்பிட்டதால் இளம்பெண் பலி?
UPDATED : செப் 19, 2024 07:21 AM
ADDED : செப் 19, 2024 12:21 AM

சென்னை : மதுரவாயல், நுாம்பல் பகுதியைச் சேர்ந்தவர் சுவேதா, 22; தனியார் பள்ளி ஆசிரியை. கடந்த 7ம் தேதி போரூரில் உள்ள சர்ச்சிற்கு சென்றுள்ளார். பின், அங்கே அருகில் உள்ள உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்டு, வீடு திரும்பி உள்ளார்.
பின், வீட்டில் மீன் குழம்பு உணவு சாப்பிட்டு இரவில் துாங்கியுள்ளார். அப்போது, திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. பெற்றோர் அவரை மீட்டு, ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், நேற்று உயிரிழந்தார். இது குறித்து விசாரிக்கும் மதுரவாயல் போலீசார், 'பிரேத பரிசோதனை முடிவு வந்த பிறகே, உயிரிழப்பிற்கான காரணம் தெரியவரும்' என்றனர்.