/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மேல்மருவத்துாரில் வழிப்பறி நெசப்பாக்கம் வாலிபர் கைது
/
மேல்மருவத்துாரில் வழிப்பறி நெசப்பாக்கம் வாலிபர் கைது
மேல்மருவத்துாரில் வழிப்பறி நெசப்பாக்கம் வாலிபர் கைது
மேல்மருவத்துாரில் வழிப்பறி நெசப்பாக்கம் வாலிபர் கைது
ADDED : ஜன 22, 2025 12:47 AM

மேல்மருவத்துார், மதுராந்தகம் அருகே, பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கோபால் மனைவி லட்சுமி, 60.
இவர், நேற்று முன்தினம், பெரும்பாக்கத்தில் இருந்து, கூடலுாரில் உள்ள தன் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
மொறப்பாக்கம் -- கூடலுார் சாலையில் நடந்து சென்றபோது, இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர், லட்சுமி கழுத்தில் அணிந்திருந்த இரண்டு சவரன் தங்க செயினை பறித்து தப்பினார்.
இதுகுறித்த லட்சுமி புகாரையடுத்து, அப்பகுதி கண்காணிப்பு கேமரா பதிவுகளை, மேல்மருவத்துார் போலீசார் ஆய்வு செய்தனர்.
இதில், சென்னை, நெசப்பாக்கம், பாரதியார் நகரைச் சேர்ந்த சஞ்சய், 20, என்பவர் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது.
அவரை கைது செய்த போலீசார், செயினை மீட்டு லட்சுமியிடம் ஒப்படைத்தனர்.
பின், மதுராந்தகம் நீதிமன்றத்தில் சஞ்சயை ஆஜர்படுத்தி, செங்கல்பட்டு கிளைச் சிறையில் அடைத்தனர்.