தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வேட்பு மனு தாக்கல் பணியால் 'ஆதார்' சேவை கிடைக்காமல் அவதி

 வேட்பு மனு தாக்கல் பணியால் 'ஆதார்' சேவை கிடைக்காமல் அவதி

 வேட்பு மனு தாக்கல் பணியால் 'ஆதார்' சேவை கிடைக்காமல் அவதி


ADDED : மார் 31, 2026 07:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 31, 2026 07:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஷெனாய் நகர்: அண்ணா நகர் மாநகராட்சி அலுவலகத்தில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்பு மனு தாக்கல் செய்யும் பணி நடப்பதால், அங்குள்ள மற்றொரு கட்டடத்தில் ஆதார் உள்ளிட்ட சேவைகளுக்காக வரும் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதால், கடும் அவதி நிலவுகிறது.

ஷெனாய் நகர், புல்லா அவென்யூவில் செயல்படும் அண்ணா நகர் மண்டல அலுவலகத்தில், ஆதார், பிறப்பு, இறப்பு சான்றிதழ் போன்ற சேவைகளுக்காக, தினமும் ஏராளமானோர் வந்து செல்வர்.

சட்டசபை தேர்தலை முன்னிட்டு, இங்கு, அண்ணா நகர் தேர்தல் அலுவலகம் செயல்படுவதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன.

போலீசார் மற்றும் சி.ஆர்.பி.எப்., படையினர் குவிக்கப்பட்டு, பல்வேறு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், பிற சேவைகளுக்காக வரும் பொதுமக்கள் மாலை 4:00 மணி வரை உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால், வெகு தொலையில் இருந்து வரும் பொதுமக்கள் அலைக்கழிப்படுகின்றனர்.

பாதிக்கப்பட்டோர் கூறியதாவது:

தேர்தல் அலுவலகம், வேறு கட்டடத்தில் இயங்கி வருகிறது. அதற்கு அருகில் உள்ள மற்றொரு கட்டடத்தின் தரை தளத்தில் ஆதார் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன. தேர்தல் பணிகளுக்கு தடுப்புகள் அவசியம்தான்.

ஆனால், சேவை மையங்களுக்கு செல்லும் வழியையே முழுதும் தடை செய்வது எங்களுக்குச் சிரமமாக உள்ளது. இதனால் ஆதார், பிறப்பு, இறப்பு உள்ளிட்ட சான்று பெற முடியாமல் சிரமம் ஏற்பட்டு வருகிறது.

தேர்தல் பணிகளும், பொதுச்சேவைகளும் ஒரே இடத்தில் நடக்கும் நிலையில், மக்களுக்கு சிரமமில்லாத வகையில் தனித்தனி வழி ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us