/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கருமாரி அம்மன் கோவிலில் ஆடி திருவிழா துவக்கம்
/
கருமாரி அம்மன் கோவிலில் ஆடி திருவிழா துவக்கம்
ADDED : ஆக 16, 2025 12:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வில்லிவாக்கம், சிட்கோ நகர் கருமாரி அம்மன் கோவிலில் நேற்று, ஆடி திருவிழா விமரிசையாக துவங்கியது.
வில்லிவாக்கம், சிட்கோ நகர், 52வது தெருவில் உள்ள கருமாரி அம்மன் கோவிலில், 41ம் ஆண்டு ஆடி திருவிழா, நேற்று காலை துவங்கியது. காலை 7:00 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது.
ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். இன்று இரவு 7:00 மணிக்கு, உடுக்கை மேளத்துடன் பதிவிளக்கு ஆரத்தி, உத்தரவு பெறுதல் நிகழ்வு நடக்கிறது.