தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ஆவடி கமாண்டென்ட் ஐகோர்ட்டில் ஆஜர்

ஆவடி கமாண்டென்ட் ஐகோர்ட்டில் ஆஜர்

ஆவடி கமாண்டென்ட் ஐகோர்ட்டில் ஆஜர்


ADDED : பிப் 07, 2024 12:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 07, 2024 12:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை,ஆவடியில் உள்ள சிறப்பு போலீஸ் பட்டாலியனில், கான்ஸ்டபிளாக பணியாற்றும் எஸ்.ராஜா, தாக்கல் செய்த மனுவில், 'எனக்கு தவறாக சம்பளம் நிர்ணயிக்கப்பட்டதாகவும், கூடுதலாக தரப்பட்ட 56,363 ரூபாயை படிப்படியாக பிடித்தம் செய்வதாகவும், 13வது பட்டாலியன் கமாண்டென்ட் உத்தரவிட்டார்.

'அதன்படி, சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்டது. சம்பளப் பிடித்தம் செய்ய, கமாண்டென்ட் பிறப்பித்த உத்தரவை, ரத்து செய்ய வேண்டும்' என கூறப்பட்டது.

மனு, நீதிபதி சத்தியநாராயண பிரசாத் முன், விசாரணைக்கு வந்தது. தவறாக எப்படி சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது; உத்தரவு பிறப்பித்த சம்பந்தப்பட்ட அதிகாரி, தற்போது பணியில் உள்ளாரா என்பதை சரிபார்க்கும்படி, அரசு வழக்கறிஞருக்கு, நீதிபதி உத்தரவிட்டார். 13வது பட்டாலியன் கமாண்டென்ட் நேரில் ஆஜராகவும், நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, 13வது பட்டாலியன் கமாண்டென்ட் அய்யாசாமி, நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார். மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ், வழக்கை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார்.

உடனே நீதிபதி, 'வழக்கை வாபஸ் பெறுவதாக கூறுவதில் இருந்து, அவர் மிரட்டப்பட்டிருப்பது தெரிகிறது. மனுதாரருக்கு ஏதும் பிரச்னை ஏற்பட்டால், தாமாக முன்வந்து நீதிமன்றம் விசாரிக்கும்; மனுதாரரைப் போன்று வேறு யாருக்கும் பிரச்னை இருந்தால், அதை தீர்க்க வேண்டும்' என்றார்.

பின், வழக்கை வாபஸ் பெற அனுமதித்து, அதை தள்ளுபடி செய்து, நீதிபதி சத்தியநாராயண பிரசாத் உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us