UPDATED : ஜூன் 08, 2026 04:39 PM
ADDED : ஜூன் 08, 2026 04:31 PM

சென்னை:ஆவின் சார்பில், சென்னையில் உள்ள ஆவின் பார்லர்களில், 'பேரிச்சம் பழம் பால்கோவா' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவை, 100 கிராம், 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இதுகுறித்து, ஆவின் அதிகாரிகள் கூறியதாவது:
சுத்தமான பசும்பாலை 50 சதவீதம் அளவிற்குச் சுண்டக்காய்ச்சி, அதனுடன் அரைத்த பேரிச்சம்பழம், நெய் மற்றும் 'நட்ஸ்' சேர்த்து, பேரிச்சம்பழ பால்கோவா தயாரிக்கப்படுகிறது. இபதப்படுத்தும் ரசாயனங்கள் எதுவும் சேர்க்கப்படாததால், தயாரித்த நாளில் இருந்து 8 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும். நுகர்வோரின் வசதிக்காக 100 கிராம் 60 ரூபாய்க்கும்; 250 கிராம் 140 ரூபாய்; 500 கிராம் 270 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பேரிச்சம் கொட்டை
சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் இல்லம் வளாகத்தில் உள்ள பாலகத்தில், 'பேரிச்சம் பழ பால்கோவவை' ருசித்த நுகர்வோர் ஒருவர் கூறியதாவது:
ஆவினில் ஏற்கனவே வழக்கமான பால்கோவா விற்பனையில் உள்ளது. புதுவரவான 'பேரிச்சம் பழம் பால்கோவா' சுவை நிறைந்ததாக உள்ளது. ஆனால், அதில் ஒரு பேரிச்சம் பழ கொட்டை இருந்தது. இனிப்பு பால்கோவாவை விட, 10 ரூபாய் விலை அதிகம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
