/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கழிவுநீரை வெளியேற்றவில்லை தீர்ப்பாயத்தில் ஆவின் அறிக்கை பசுமை தீர்ப்பாயத்தில் ஆவின் நிர்வாகம் அறிக்கை
/
கழிவுநீரை வெளியேற்றவில்லை தீர்ப்பாயத்தில் ஆவின் அறிக்கை பசுமை தீர்ப்பாயத்தில் ஆவின் நிர்வாகம் அறிக்கை
கழிவுநீரை வெளியேற்றவில்லை தீர்ப்பாயத்தில் ஆவின் அறிக்கை பசுமை தீர்ப்பாயத்தில் ஆவின் நிர்வாகம் அறிக்கை
கழிவுநீரை வெளியேற்றவில்லை தீர்ப்பாயத்தில் ஆவின் அறிக்கை பசுமை தீர்ப்பாயத்தில் ஆவின் நிர்வாகம் அறிக்கை
ADDED : அக் 03, 2024 12:17 AM
சென்னை, 'சென்னை அம்பத்துார் பால் பண்ணையில் இருந்து, ஒரு சொட்டு கழிவுநீர் கூட வெளியே விடப்படுவதில்லை' என, தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில், ஆவின் இணை நிர்வாக இயக்குனர் தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சென்னைக்கு அருகில் உள்ள கொரட்டூர் ஏரியில், அம்பத்துார் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலை கழிவுகள் கலக்கப்படுகின்றன. அம்பத்துார் பால் பண்ணையில் இருந்து வெளியேறும் கழிவுநீரும், கொரட்டூர் ஏரியில் கலக்கிறது. இதனால் ஏரி மாசடைந்து நீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
உயிரினங்களும் வாழ முடியாத சூழல் உருவாகியுள்ளது. எனவே, ஏரியில் தொழிற்சாலை கழிவுகள் கலப்பதை தடுக்க உத்தரவிட வேண்டும் என, கொரட்டூர் ஏரி பாதுகாப்பு மக்கள் இயக்கம் சார்பில், தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதை விசாரித்த தீர்ப்பாயம், இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு, அம்பத்துார் சிட்கோ தொழிற்பேட்டை நிர்வாக இயக்குனர், ஆவின் இணை நிர்வாக இயக்குனர் மற்றும் அம்பத்துார் தொழிற்பேட்டையில் செயல்படும் பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது.
அதன்படி தீர்ப்பாயத்தில் ஆவின் இணை நிர்வாக இயக்குனர் தாக்கல் செய்த அறிக்கை:
அம்பத்துார் பால் பண்ணையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் புதுப்பித்தல் பணிகள் முடிக்கப்பட்டு, செயல்பாட்டில் உள்ளன. அம்பத்துார் பால் பண்ணையில் உருவாகும் கழிவு நீர், சுத்திகரிப்பு நிலையத்தில் முழுமையாக சுத்திகரிக்கப்படுகிறது.
அம்பத்துார் பால் பண்ணை வளாகத்தில் ஏற்கனவே, 5,000 மரங்கள் உள்ளன.
கடந்த 2023 செப்டம்பரில் 1,200 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. விரைவில் 7,000 மரக்கன்றுகள் நட இருக்கிறோம். சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் மரங்களுக்கு பாய்ச்ச பயன்படுத்தப்படுகிறது.
சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரோ, சுத்திகரிக்கப்படாத கழிவுநீரோ ஒரு சொட்டு கூட, அம்பத்துார் பால் பண்ணை வளாகத்தை விட்டு வெளியே அனுப்பப்படுவதில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.