/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருமண நிகழ்ச்சியில் மொய்பணம் 'அபேஸ்'
/
திருமண நிகழ்ச்சியில் மொய்பணம் 'அபேஸ்'
ADDED : பிப் 14, 2025 12:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, வேளச்சேரியை சேர்ந்த ஆகாஷ்குமார், 40, என்பவரின், தங்கையின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி எழும்பூரில் உள்ள ராஜா முத்தையா மண்டபத்தில் நேற்று முன்தினம் நடந்தது. அப்போது ஆகாஷ் குமாரின் தம்பி நிகேஷ், நான்கு லட்சம் ரூபாய் மொய்பணம் இருந்த பையை, சோபாவில் வைத்துவிட்டு புகைப்படம் எடுக்க சென்றுள்ளார். திரும்பவந்து பார்த்தபோது, பை மாயமாகி இருந்தது.
மண்டப அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை ஆய்வு செய்தபோது, இரண்டு மர்மநபர்கள் மொய்பணம் அடங்கிய பையையும், மடிக்கணினி பையையும் திருடிச் சென்றது பதிவாகி இருந்தது. எழும்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

