/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அப்துர் ரஹ்மான் பல்கலை பட்டமளிப்பு விழா
/
அப்துர் ரஹ்மான் பல்கலை பட்டமளிப்பு விழா
ADDED : பிப் 21, 2024 01:20 AM
சென்னை:சென்னை, வண்டலுாரில் உள்ள பி.எஸ்.அப்துர் ரஹ்மான் கிரசண்ட் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்டு டெக்னாலஜியின் 13வது பட்டமளிப்பு விழா, நேற்று நடந்தது.
இதில், 93 பிஎச்.டி., 599 முதுநிலை பட்டப்படிப்பு, 1,712 இளநிலை பட்டப்படிப்பு மாணவர்கள் என, மொத்தம் 2,404 பட்டதாரிகள் பட்டம் பெற்றனர்.
முதலிடம் பெற்ற 53 மாணவர்களுக்கு, தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. 671 மாணவர்கள், நேரில் பட்டம் பெற்றனர். 1,680 மாணவர்கள் 'ஆன்லைன்' வாயிலாக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றனர்.
விழாவில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சி.எஸ்.ஐ.ஆர்., செயலர் மற்றும் டி.எஸ்.ஐ.ஆர்., தலைமை இயக்குனர் என்.கலைச்செல்வி, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
பி.எஸ்.அப்துர் ரஹ்மான் கிரசண்ட் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி அதிபர் குர்ரத் ஜமீலா, சார்பு அதிபர் அப்துல் காதர் ரஹ்மான் புஹாரி, துணைவேந்தர் முருகேசன், பதிவாளர் ராஜா ஹூசைன் உள்ளிட்டோர், பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றனர்.
பட்டங்களை வழங்கி பேசிய கலைச்செல்வி, ''பாரம்பரியம் மற்றும் கலாசாரத்திற்கு பெயர் பெற்ற இந்தியா, அற்புதமான 21ம் நுாற்றாண்டிற்கு தயாராக உள்ளது. பி.எஸ்.அப்துர் ரஹ்மான் கிரசண்ட் இன்ஸ்டிடியூட், சமூகப் பொறுப்பு மற்றும் சமூக- பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கிறது. இது ஒரு முக்கிய சக்தியாகும். இதைக் கொண்டு, எதிர்காலத்தை ஒன்றாக வடிவமைப்போம்,'' என்றார்.

