ADDED : ஜூன் 17, 2025 12:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொளத்துார், எண்ணுார் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் ஹரிஹரன், 24. வழிப்பறி வழக்கில், 2019ம் ஆண்டு ராஜமங்கலம் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின், ஜாமினில் வெளியே வந்தார்.
வெளியே வந்ததும், நீதிமன்றத்தில் ஆஜராகாமல், நான்கு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார். இதையடுத்து, அவரை பிடித்து ஆஜர்படுத்த, நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது.
இதையடுத்து, எண்ணுாரில் தலைமறைவாக இருந்த ஹரிஹரனை, ராஜமங்கலம் போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.