UPDATED : மே 15, 2026 09:32 PM
ADDED : மே 15, 2026 08:53 PM
அ நிறம் | அளவு
ஜாம்பஜார்: பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட குற்றவாளியை, போலீசார் கைது செய்தனர்.
ஜாம்பஜார் காவல் நிலையத்தில், 2024ம் ஆண்டு அடிதடி வழக்கில், திருவல்லிக்கேணியைச் சேர்ந்த விஷால், 25 என்பவரை, போலீசார் கைது செய்தனர்.
இவ்வழக்கு விசாரணை, எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், ஜாமினில் வெளியே வந்த இவர் தலைமறைவானார்.
தொடர்ந்து நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாததால், ஏப்., 2ம் தேதி நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. இந்நிலையில் தலைமறைவான விஷாலை, ஜாம்பஜார் போலீசார் கைது செய்து, மீண்டும் சிறையில் அடைத்தனர்.
