ADDED : மே 10, 2025 12:25 AM

அ நிறம் | அளவு
எழும்பூர், எழும்பூர், காந்தி இர்வின் சாலையில் ரமடா ஹோட்டல் உள்ளது. இங்கு பிப்., 5ம் தேதி தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அருண்குமார், 45, என்பவர் மேலாளராக பணிக்கு சேர்ந்தார்.
அவருக்கு ஹோட்டல் நிர்வாகத்தினர் பணி மேற்கொள்வதற்காக, மடிக்கணினி ஒன்றை வழங்கினர். சில தினங்களுக்கு முன், முன்பணமாக, 10,000 வாங்கிக் கொண்டு, எந்தவித தகவலும் தெரிவிக்காமல் தலைமறைவானார்.
இது குறித்து விசாரித்த எழும்பூர் போலீசார், அவரை நேற்று கைது செய்தனர்; மடிக்கணினி மீட்கப்பட்டது.
