UPDATED : மே 12, 2026 09:41 PM
ADDED : மே 12, 2026 09:32 PM
சென்னை:சென்னையில் இருந்து அபுதாபிக்கு செல்லும் எத்தியாட் ஏர்வேஸ் விமானம், நேற்று காலை 10:15 மணிக்கு, சென்னையில் இருந்து புறப்பட தயாரானது. விமானத்தில், 228 பயணியர் 10 விமான ஊழியர்கள் என, 238 பேர் இருந்தனர்.
விமானம், ஓடு பாதையில் ஓட துவங்கிய போது, திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதை கண்டுபிடித்த விமானி, விமானத்தை அவசரமாக நிறுத்தினார்.
இதையடுத்து, விமான பொறியாளர்கள் குழுவினர் வந்து, விமானத்தை ஆய்வு செய்தனர். விமானத்தின் 'ஹைட்ராலிக்' பிரச்னையால் கேளாறு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, விமானம் தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டது. உள்ளே இருந்த பயணியர், ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர். பின், விமானம் பழுது பார்க்கப்பட்டு, 5 மணி நேரம் தாமதமாக, மாலை 3:10 மணிக்கு, சென்னையில் இருந்து அபுதாபிக்கு புறப்பட்டு சென்றது.
விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டதால், பயணியர் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் தவித்தனர்.
