/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை - புதுச்சேரி 4 விரைவு ரயில்களில் ' ஏசி ' பெட்டிகள்
/
சென்னை - புதுச்சேரி 4 விரைவு ரயில்களில் ' ஏசி ' பெட்டிகள்
சென்னை - புதுச்சேரி 4 விரைவு ரயில்களில் ' ஏசி ' பெட்டிகள்
சென்னை - புதுச்சேரி 4 விரைவு ரயில்களில் ' ஏசி ' பெட்டிகள்
ADDED : அக் 07, 2025 12:51 AM
சென்னை, நான்கு விரைவு ரயில்களில் தலா ஒரு 'ஸ்லீப்பர்' பெட்டி நீக்கப்பட்டு, அதற்கு மாற்றாக 'ஏசி' பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:
தெலுங்கானா மாநிலம் காச்சிகுடா - செங்கல்பட்டு விரைவு ரயிலில் வரும் டிச., 6 முதல் ஒரு ஸ்லீப்பர் பெட்டி நீக்கப்பட்டு, இரண்டாம் வகுப்பு 'ஏசி' பெட்டி இணைத்து இயக்கப்படும்
ஆந்திரா மாநிலம் காக்கிநாடா போர்ட் - செங்கல்பட்டு ரயிலில் வரும் டிச., 7 முதல் ஒரு ஸ்லீப்பர் பெட்டி நீக்கப்பட்டு, மாறாக இரண்டாம் வகுப்பு 'ஏசி' பெட்டி இணைத்து இயக்கப்படும்
தெலுங்கானா காச்சிகுடா - புதுச்சேரி விரைவு ரயிலில் வரும் டிச., 5ம் தேதி முதல் ஒரு ஸ்லீப்பர் பெட்டி நீக்கப்பட்டு, மாற்றாக இரண்டாம் வகுப்பு 'ஏசி' பெட்டி இணைத்து இயக்கப்படும்
காக்கிநாடா போர்ட் - புதுச்சேரி விரைவு ரயிலில் வரும் டிச., 8 முதல் ஒரு ஸ்லீப்பர் பெட்டி நீக்கப்பட்டு, மாற்றாக இரண்டாம் வகுப்பு 'ஏசி' பெட்டி இணைத்து இயக்கப்படும்.