sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 'மெட்ரோ' நிலையங்களில் இருந்து செப்., முதல் 'ஏசி' சிற்றுந்து சேவை

/

 'மெட்ரோ' நிலையங்களில் இருந்து செப்., முதல் 'ஏசி' சிற்றுந்து சேவை

 'மெட்ரோ' நிலையங்களில் இருந்து செப்., முதல் 'ஏசி' சிற்றுந்து சேவை

 'மெட்ரோ' நிலையங்களில் இருந்து செப்., முதல் 'ஏசி' சிற்றுந்து சேவை


ADDED : பிப் 20, 2026 06:13 AM

Google News

ADDED : பிப் 20, 2026 06:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து, 'ஏசி' சிற்றுந்துகள் வரும் செப்டம்பர் மு தல் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளன.

இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து, மாநகர போக்குவரத்து கழகம் வாயிலாக, முக்கிய ரயில், பேருந்து நிலையங்கள், குடியிருப்புகள், தனியார் ஐ.டி., நிறுவனங்களை இணைக்கும் வகையில், 220 'ஏசி' சிற்றுந்துகள் இயக்க திட்டமிட்டுள்ளோம்.

இவற்றில், 70 சிற்றுந்துகள் 7 மீட்டர் நீளம், 2.2 மீட்டர் அகலம் கொண்டதாகவும், மற்றவை 5.5 மீட்டர் நீளம், 1.8 மீட்டர் அலகம் கொண்டதாகவும் இருக்கும். இதற்கான டெண்டர் விரைவில் வெளியிடப்பட்டு, தயாரிப்பு நிறுவனம் தேர்வு செய்யப்பட உள்ளது.

முதல் கட்டமாக தேர்வு செய்யப்படும், 11 மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து, 5 கி.மீ., துாரத்துக்கு, 'ஏசி' சிற்றுந்துகள் இயக்கப்படும். காலை 7:00 முதல் இரவு 11:00 மணி வரை, 5 நிமிட இடைவெ ளியில், ஒரு சிற்றுந்து சேவை இருக்கும்.

கட் டணம் இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை. வரும் செப்டம்பர் முதல் 'ஏசி' சிற்றுந்துகள் படிப்படியாக பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளன .

இ வ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us