தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/சென்னை – அரக்கோணம் தடத்தில் ‘ஏசி’ ரயில் சேவை நாளை தொடக்கம்

சென்னை – அரக்கோணம் தடத்தில் ‘ஏசி’ ரயில் சேவை நாளை தொடக்கம்

சென்னை – அரக்கோணம் தடத்தில் ‘ஏசி’ ரயில் சேவை நாளை தொடக்கம்


UPDATED : அக் 22, 2026 12:00 AM

ADDED : அக் 21, 2026 08:37 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 22, 2026 12:00 AM ADDED : அக் 21, 2026 08:37 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் தடத்தில், ‘ஏசி’ மின்சார ரயில் சேவை நாளை தொடங்க உள்ளது.

சென்னை கடற்கரை – செங்கல்பட்டு தடத்தில், முதற்கட்டமாக ‘ஏசி’ மின்சார ரயில் சேவை, கடந்தாண்டு ஏப்., 19ல் தொடங்கப்பட்டது. இந்த ரயிலுக்கு, பயணியர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இரண்டாவதாக சென்ட்ரல் – அரக்கோணம் தடத்தில், ‘ஏசி’ மின்சார ரயில் இயக்க, கடந்த பிப்ரவரியில் தெற்கு ரயில்வேயிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், சென்ட்ரல் – அரக்கோணம் தடத்தில் நாளை முதல் ‘ஏசி’ மின்சார ரயில் இயக்கப்பட உள்ளது. வரும் டிச., 24ம் தேதி வரை சோதனை முறையில் இயக்கப்பட உள்ளது. வாரத்தில் சனி, ஞாயிறு தவிர, மற்ற ஐந்து நாட்களில் இயக்கப்பட உள்ளது. ஒரே நேரத்தில் 5,000 பேர் பயணம் செய்ய முடியும்.

இந்த ரயில், சென்ட்ரலில் இருந்து மாலை 6:30 மணிக்கு புறப்பட்டு, இரவு 7:55 மணிக்கு அரக்கோணம் சந்திப்பை சென்றடைகிறது.

அரக்கோணத்தில் இருந்து காலை 8:00 மணிக்கு புறப்பட்டு திருவள்ளூர் நிலையத்தை காலை 8:30 மணிக்கும், சென்ட்ரல் நிலையத்தை காலை 9:30 மணிக்கும் வந்தடையும். இந்த ரயில் திருவாலங்காடு, கடம்பத்துார், திருவள்ளூர், திருநின்றவூர், வில்லிவாக்கம், பெரம்பூர், பேசின்பிரிட்ஜ் ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்லும்.

முன்னதாக, இந்த ரயில் ஆவடியில் இருந்து காலை 6:30 மணிக்கு புறப்பட்டு, காலை 7:45 மணிக்கு அரக்கோணத்தை சென்றடையும். மற்றொரு சேவை, சென்ட்ரலில் இருந்து காலை 9:40 மணிக்கு புறப்பட்டு, ஆவடி நிலையத்தை காலை 10:25 மணிக்கு அடையும். ஆவடியில் இருந்து மாலை 5:25 மணிக்கு புறப்பட்டு, மாலை 6:10 மணிக்கு சென்னை சென்ட்ரல் செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

கட்டணம் எவ்வளவு?

1 – 10 கி.மீ., வரை 35 ரூபாய்

11 – 15 கி.மீ., வரை 40 ரூபாய்

16 – 25 கி.மீ., வரை 60 ரூபாய்

26 – 35 கி.மீ., வரை 85 ரூபாய்

36 – 45 கி.மீ., வரை 90 ரூபாய்

46 – 50 கி.மீ., வரை 95 ரூபாய்

51 – 55 கி.மீ., வரை 100 ரூபாய்

56 – 60 கி.மீ., வரை 105 ரூபாய்

61 – 65 கி.மீ., வரை 215 ரூபாய்

66 – 70 கி.மீ., வரை 230 ரூபாய்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us