ADDED : அக் 21, 2025 11:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: வேளச்சேரியில் குளிரூட்டப்பட்ட திருமண மண்டபத்தை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என, சென்னை கலெக்டர் தெரிவித்துள்ளார்.
தமிழக வீட்டு வசதி வாரியத்தின் பெசன்ட் நகர் கோட்டத்தில், வேளச்சேரி, நேரு நகர், காமராஜர் தெருவில், 650 இருக்கை வசதி கொண்ட, குளிரூட்டப்பட்ட திருமண மண்டபம் வாடகைக்கு தயாராக உள்ளது.
இங்கு, 250 பேர் அமரக்கூடிய உணவு அரங்கம், சமையல் கூடம், குளிர்சாதன வசதியுடன் மணமக்கள் அறைகள், ஐந்து விருந்தினர் அறைகள், மின்துாக்கி, தங்கும் அறைகள், பார்க்கிங் வசதிகள் உள்ளன.
இவற்றை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.