/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆற்காடு சாலையில் 6 அடிக்கு திடீர் பள்ளம் முன்கூட்டியே சுதாரித்ததால் விபத்து தவிர்ப்பு
/
ஆற்காடு சாலையில் 6 அடிக்கு திடீர் பள்ளம் முன்கூட்டியே சுதாரித்ததால் விபத்து தவிர்ப்பு
ஆற்காடு சாலையில் 6 அடிக்கு திடீர் பள்ளம் முன்கூட்டியே சுதாரித்ததால் விபத்து தவிர்ப்பு
ஆற்காடு சாலையில் 6 அடிக்கு திடீர் பள்ளம் முன்கூட்டியே சுதாரித்ததால் விபத்து தவிர்ப்பு
ADDED : அக் 25, 2025 11:28 PM

கோடம்பாக்கம்: மெட்ரோ ரயில் திட்டப்பணி நடந்து வரும் கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில், மண் உள்வாங்குவதை முன்கூட்டியே கண்டறிந்ததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 6 அடி ஆழத்தில் பள்ளம் விழும் முன், அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிக்காக, சென்னை கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வழித்தடம், கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில், மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதனால், இச்சாலை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோடம்பாக்கம் புலியூர் அருகே, 20 அடி ஆழத்தில் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணி நடக்கும் பகுதியில், நேற்று காலை தண்ணீருடன் மண் கலந்து வந்துள்ளது.
இதனால், சாலை உள்வாங்கி, எந்நேரமும் பள்ளம் ஏற்படலாம் என, மெட்ரோ ரயில் அதிகாரிகள், போக்குவரத்து துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து உதவி கமிஷனர் ராஜா தலைமையிலான போலீசார், ஆற்காடு சாலையில் உடனடியாக போக்குவரத்தை தடை செய்தனர்.
மேலும், ஆற்காடு சாலையில் வரும் வாகனங்களை, புலியூர் இரண்டாவது பிரதான சாலையில் இருந்து வலது புறம் திருப்பி, புலியூர் முதல் குறுக்கு தெரு வழியாக, புலியூர் பிரதான சாலை சென்று, ஆற்காடு சாலையை அடையும்படி, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
பின், தண்ணீர் கசிந்து மண் கலந்து வந்த பகுதியில், சாலையை உடைத்து பார்த்தபோது, 6 அடி ஆழம், 7 அடி அகலத்திற்கு சாலை உள்வாங்கி பெரும் பள்ளம் இருப்பது தெரிய வந்தது.
தொடர்ந்து, மெட்ரோ ரயில் ஊழியர்கள், சிமென்ட் கலவை கொட்டி, அந்த பள்ளத்தை மூடினர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சாலை உள்வாங்குவதை முன்கூட்டியே கணித்ததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக, போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

