/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கார் கதவை திறந்ததால் விபத்து பைக்கில் சென்றவர் லாரி மோதி பலி
/
கார் கதவை திறந்ததால் விபத்து பைக்கில் சென்றவர் லாரி மோதி பலி
கார் கதவை திறந்ததால் விபத்து பைக்கில் சென்றவர் லாரி மோதி பலி
கார் கதவை திறந்ததால் விபத்து பைக்கில் சென்றவர் லாரி மோதி பலி
ADDED : செப் 20, 2024 12:33 AM

திருவேற்காடு, மதுரவாயல் அடுத்த, அடையாளம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன், 38; லோடு ஆட்டோ ஓட்டுனர். நேற்று முன்தினம் இரவு, பணி முடிந்து 'பஜாஜ் பிளாட்டினா' பைக்கில், வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
திருவேற்காடு, பெருமாள் அகரம் பகுதியில், சாலையோரத்தில் 'போர்டு இகோ ஸ்போர்ட்ஸ்' கார் நிறுத்தப்பட்டிருந்தது.
அதனுள்ளே இருந்த ராமமூர்த்தி, 52, என்பவர், காரின் வலது பக்க கதவை திடீரென திறக்கவும், அவ்வழியே பைக்கில் வந்த சரவணன், கார் கதவில் மோதி, தடுமாறி சாலையில் விழுந்தார்.
அப்போது, எதிர் திசையில் வந்த லாரி, சரவணன் மீது ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மேலும், விபத்துக்கு காரணமான கார் ஓட்டுனர் திருவேற்காடு ராமமூர்த்தி, லாரி ஓட்டுனர் மாரிமுத்து, 35, ஆகிய இருவரையும், போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.