/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின் கம்பத்தில் இருந்து தீப்பொறி விழுந்து விபத்து
/
மின் கம்பத்தில் இருந்து தீப்பொறி விழுந்து விபத்து
மின் கம்பத்தில் இருந்து தீப்பொறி விழுந்து விபத்து
மின் கம்பத்தில் இருந்து தீப்பொறி விழுந்து விபத்து
ADDED : நவ 18, 2025 04:42 AM

ஆவடி: ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, விவேகானந்தா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் முதல் மாடியில் வசிப்பவர் டேவிட், 33. அவரது மனைவி தனலட்சுமி, 30. தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார்.
நேற்று மதியம், அவரது வீட்டை ஒட்டியுள்ள மின் கம்பத்தில் இருந்து தீப்பொறி விழுந்து, பால்கனியில் உள்ள செருப்பு ஸ்டாண்ட் தீப்பிடித்து எரிந்தது. அதிர்ச்சி அடைந்த தனலட்சுமி, மகனுடன் பத்திரமாக வெளியேறினார்.
தகவலறிந்து வந்த ஆவடி தீயணைப்பு துறையினர், தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். தீ பரவியதில், 'ஏசி' அவுட்டோர் யூனிட் முழுதும் எரிந்து நாசமானது. அதிர்ஷ்டவசமாக, எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை. ஆவடி போலீசார் விசாரிக்கின்றனர்.