/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அண்ணா சாலையில் விபத்து பைக் மீது கார் மோதல்
/
அண்ணா சாலையில் விபத்து பைக் மீது கார் மோதல்
ADDED : செப் 22, 2024 06:56 AM
சென்னை : அண்ணாசாலை, எல்.ஐ.சி., அருகே கார் மோதி இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில், தலையில் பலத்தகாயமடைந்த மாநகராட்சி பொறியாளரின் கணவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோடம்பாக்கம், யுனைடெட் இந்தியா காலனியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி, 58; மாநகராட்சி பொறியாளர். அவரது கணவர் செந்தில், 64. இருவரும் நேற்று முன்தினம் மாலை இருசக்கர வாகனத்தில் அண்ணாசாலை வழியாக சென்றனர்.
அப்போது அவ்வழியாக வந்த கியா கார், இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில், தலையில் பலத்தகாயமடைந்த செந்திலை அக்கம் பக்கத்தினர் மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு இருந்து மேல் சிகிச்சைக்காக ஆயிரம்விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, விபத்து ஏற்படுத்திய வேப்பேரியைச் சேர்ந்த தோஷி, 23 என்பவரிடம் விசாரித்து வருகின்றனர்.