/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'ஏசி' காப்பர் கம்பி திருடியவர் கைது
/
'ஏசி' காப்பர் கம்பி திருடியவர் கைது
ADDED : பிப் 15, 2025 08:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:திருவல்லிக்கேணி, டி.பி., கோவில் தெருவைச் சேர்ந்தவர் இந்துமதி சொக்கலிங்கம், 31. Hவரது வீட்டின் மொட்டை மாடியில் இருந்த 'ஏசி' இயந்திரத்தில் பொருத்தப்பட்டிருந்த காப்பர் கம்பியை, மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.
ஐஸ்ஹவுஸ் போலீசார் விசாரித்தரன்.
இதில், ராயப்பேட்டை, லாயிட்ஸ் சாலையைச் சேர்ந்த விஷால், 19, என்பவர் 2 கிலோ காப்பர் கம்பியை திருடிச் சென்றது தெரியவந்தது. நேற்று அவரை போலீசார் கைது செய்தனர்.