/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பணி முடிக்காத ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை: தலைமை செயலர்
/
பணி முடிக்காத ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை: தலைமை செயலர்
பணி முடிக்காத ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை: தலைமை செயலர்
பணி முடிக்காத ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை: தலைமை செயலர்
ADDED : ஜூன் 29, 2025 12:17 AM

சென்னை, ''பருவமழை நெருங்குவதால், குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் முறையாக பணி முடிக்காத ஒப்பந்த நிறுவனங்கள், கண்காணிக்க தவறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, தலைமை செயலர் முருகானந்தம், உயர் அதிகாரிகளிடம் கூறினார்.
தென்சென்னையில், வெள்ளம் பாதிப்பு பகுதிகளான வேளச்சேரி, துரைப்பாக்கம், தரமணி, சோழிங்கநல்லுார், பெரும்பாக்கம், பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளை, தமிழக தலைமை செயலர் முருகானந்தம், நேற்று பார்வையிட்டார்.
இங்கு, 518 கோடி ரூபாயில் நடக்கும் குடிநீர், கழிவுநீர் திட்ட பணிகளை பார்வையிட்டு, அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். சில பகுதிகளில், உயர் அதிகாரிகள் உத்தரவின்பேரில், ஒப்பந்த நிறுவனங்கள் பணியை முழுமையாக செய்யவில்லை என தெரிந்தது.
பள்ளம் எடுத்து பணியை பாதியில் நிறுத்தியதால், பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை அனுபவிப்பதாக கூறினர். திட்ட பணி அதிகாரிகள், ஒப்பந்த நிறுவனங்களை அழைத்து, பணிகள் தாமதம் குறித்து, அவர்களிடம் கடிந்து கொண்டார்.
பள்ளம் எடுத்த தெருக்களில் குறிப்பிட்ட கால அவகாசத்தில் பணி முடித்து, இணைப்பு வழங்கி சாலையை சீரமைக்க வேண்டும். கண்காணிக்க தவறும் அதிகாரிகள், முறையாக பணி செய்யாத ஒப்பந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க, உயர் அதிகாரிகளிடம் கூறினார்.
சோழிங்கநல்லுார் தாங்கல் ஏரி, 5 கோடி ரூபாயில் மேம்படுத்தும் பணி முடியும் தருவாயில் உள்ளது. இதை பார்வையிட்டு கூடுதலாக 4.30 கோடி ரூபாயில் நடைபெறும் திட்டம் குறித்து கேட்டறிந்தார்.