sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சட்டவிரோதமாக செயல்படும் விடுதிகள் மீது நடவடிக்கை அடையாறு மண்டல கூட்டத்தில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

/

சட்டவிரோதமாக செயல்படும் விடுதிகள் மீது நடவடிக்கை அடையாறு மண்டல கூட்டத்தில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

சட்டவிரோதமாக செயல்படும் விடுதிகள் மீது நடவடிக்கை அடையாறு மண்டல கூட்டத்தில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

சட்டவிரோதமாக செயல்படும் விடுதிகள் மீது நடவடிக்கை அடையாறு மண்டல கூட்டத்தில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்


ADDED : மே 16, 2025 12:15 AM

Google News

ADDED : மே 16, 2025 12:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அடையாறு, :அடையாறு மண்டல குழு கூட்டம், மண்டல உதவி கமிஷனர் ஆர்ட்டின் முன்னிலையில், மண்டல குழு தலைவர் துரைராஜ் தலைமையில் நேற்று நடந்தது. இதில், மாநகராட்சி குடிநீர் வாரியம் உள்ளிட்ட துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

ஆனந்தம், தி.மு.க.,- 176வது வார்டு: வேளச்சேரியில் வடிகால் கட்ட முடியாத பகுதிகளில் குழாய் அமைத்து, மழைநீரை வெளியேற்ற வேண்டும். அபாயகரமாக கம்பங்களில் தொங்கும் தொலைத்தொடர்பு கேபிள்களை முறைப்படுத்த வேண்டும்.

மோகன்குமார், தி.மு.க.,- 168வது வார்டு: கிண்டி சிட்கோ நிர்வாகம், பொதுமக்கள் கோரிக்கைக்கு செவி சாய்ப்பதில்லை. ஈக்காட்டுத்தாங்கலில் 1996ம் ஆண்டு பதிக்கப்பட்ட குழாய்களால், கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லை. அதனால், புதிய குழாய் பதிக்க வேண்டும்.

கதிர்முருகன், அ.தி.மு.க.,- 170வது வார்டு: கோட்டூர்புரத்தில் ஊழியர் நியமிக்காததால் மூடப்பட்ட இ- - சேவை மையத்தை திறக்க வேண்டும்.

ராதிகா, தி.மு.க.,- 174வது வார்டு: பெசன்ட் நகர், சாஸ்திரி நகரில் பருவ மழைக்கு முன் வடிகால் பணிகளை முடிக்க வேண்டும். உடற்பயிற்சி கூடம் கட்டும் பணியை வேகப்படுத்த வேண்டும்.

மகேஸ்வரி, தி.மு.க.,- 175வது வார்டு: அம்பேத்கர் நகரில் முறையான குடிநீர் வினியோகம் இல்லை. மிகவும் சேதமடைந்துள்ள மின் பகிர்மான பெட்டியை மாற்ற வேண்டும்.

கயல்விழி, தி.மு.க., 179வது வார்டு: கலாஷேத்ரா காலனி, லட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகள் தாழ்வாக உள்ளதால், கழிவுநீர் பிரச்னை ஏற்படுகிறது. இதனால், சாலையோர கழிவு நீரேற்று நிலையம் கட்டி, கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.

விஷாலாட்சி, தி.மு.க., 180வது வார்டு: கடற்கரை பகுதியானதால், காற்றில் மரக்கிளைகள் முறிந்து, வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படுகிறது. மரக்கிளைகளை வெட்டுவது குறித்து, பல மாதங்களாக நடவடிக்கை இல்லை.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

இதற்கு அந்தந்த துறை அதிகாரிகள் பதில் கூறினர். இறுதியில், மண்டல குழு தலைவர் துரைராஜ் பேசியதாவது:

மாநகராட்சி, குடிநீர் வாரியம், மின்சார வாரிய பொறியாளர்கள், மக்கள் புகார் தந்தால் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இருக்க வேண்டாம்.

தினமும் ரோந்து பணியில் ஈடுபட்டு, மக்கள் புகார் கூறும் முன், அந்த பிரச்னைகளை கண்டறிந்து சரி செய்ய வேண்டும்.

மழைநீர் வடிகாலில் விடும் சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகளை, அடைத்தது குறித்து, ஒவ்வொரு கூட்டத்திலும் சுகாதாரத்துறை பட்டியல் தர வேண்டும்.

சட்ட விரோதமாக நடத்தப்படும் விடுதிகளை கண்டறிந்து, அதன்மீது நடவடிக்கை எடுக்க துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, சாலை, வடிகால் சீரமைப்பு உள்ளிட்ட பணிகளுக்காக, 39 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






      Dinamalar
      Follow us