/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
லுாப் சாலையை இருவழியாக மாற்ற மீனவர்கள் கோரிக்கை
/
லுாப் சாலையை இருவழியாக மாற்ற மீனவர்கள் கோரிக்கை
UPDATED : ஏப் 04, 2025 05:12 AM
ADDED : ஏப் 03, 2025 11:55 PM

சாந்தோம் நெடுஞ்சாலையில் மெட்ரோ ரயில் பணி மேற்கொள்ளப்பட்டபோது, போக்குவரத்து வசதிக்காக மெரினா லுாப் சாலை, ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது.
அடையாறு பகுதியிலிருந்து பிரோட்வே செல்லும் அனைத்து வாகனங்களும், சாந்தோம் நெடுஞ்சாலை வழியாகவும், பிராட்வே பகுதியிலிருந்து அடையாறு நோக்கி செல்லும் வாகனங்கள், கலங்கரை விளக்கம் அருகே மெரினா லுாப் சாலை வழியாக செல்லும்படியும் போக்குவரத்து மாற்றப்பட்டது.
இதனால், லுாப் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலையில் வசிப்போர், ஒவ்வொரு முறையும், 3 - 4 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் நிலை உள்ளது.
இதனால் சிரமப்படும் மீனவர்கள் நேற்று, லுாப் சாலையையும், சாந்தோம் நெடுஞ்சாலையும் இரு வழியாக மாற்றக் கோரி, நொச்சிக்குப்பத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது மெரினா போலீசார் உரிய நடவடிக்கை விரைந்து எடுப்பதாக உறுதி அளித்து உள்ளனர்.

