UPDATED : அக் 18, 2026 06:57 PM
ADDED : அக் 18, 2026 06:54 PM
அ நிறம் | அளவு
அண்ணா நகர்: அண்ணா நகர், 12வது பிரதான சாலையில் சிலர் போதைப் பொருள் பயன்படுத்துவதாக, தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், ஐந்து பேரை பிடித்து, அண்ணா நகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில், திருமங்கலத்தைச் சேர்ந்த சீனிவாசன், 27, அம்பத்துாரைச் சேர்ந்த எட்வின் அல்பர்ட், 21, பிரசன்னா, 22, கேவின் குமார், 24, பவன்கல்யாண், 24, என்பது தெரிந்தது.
இவர்களில் நான்கு பேர் கல்லுாரி மாணவர்கள் என்பதும், போதை பொருட்களை வியாபாரிகளிடம் வாங்கி பயன்படுத்தியதும் தெரியவந்தது.
அவர்களிடம் இருந்து 10 கிராம் மெத் ஆம்பெட்டமைன், கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, ஐந்து பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
