/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பொது 4 விரைவு ரயில்களில் கூடுதல் 'ஏசி' பெட்டிகள்
/
பொது 4 விரைவு ரயில்களில் கூடுதல் 'ஏசி' பெட்டிகள்
ADDED : ஏப் 17, 2025 12:16 AM
சென்னை, சென்னை சென்ட்ரல் - டில்லி ஹஸ்ரத் நிஜாமுதீன் செல்லும் விரைவு ரயில்களில், தற்காலிகமாக கூடுதல் 'ஏசி' பெட்டிகள் இணைத்து இயக்கப்பட உள்ளது.
தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட அறிக்கை:
★ சென்ட்ரல் - ஹஸ்ரத் நிஜாமுதீன் துரந்தோ ரயிலில் வரும் 18 முதல் ஜூலை 7ம் தேதி வரையில், 3ம் வகுப்பு 'ஏசி' பெட்டி ஒன்று இணைக்கப்படும்
★ ஹஸ்ரத் நிஜாமுதீன் - சென்ட்ரல் துரந்தோ ரயிலில் வரும் 19 முதல் ஜூலை 8ம் தேதி வரையில், 3ம் வகுப்பு 'ஏசி' பெட்டி ஒன்று இணைக்கப்படும்
★ சென்ட்ரல் - ஹஸ்ரத் நிஜாமுதீன் கரீப் ரத் ரயிலில் வரும் 19 முதல் ஜூலை 5ம் தேதி வரையில் 3ம் வகுப்பு 'ஏசி' பெட்டி ஒன்று இணைத்து இயக்கப்படும்
★ ஹஸ்ரத் நிஜாமுதீன் - சென்ட்ரல் கரீப் ரத் ரயிலில் வரும் 20 முதல் ஜூலை 7ம் தேதி வரையில் 3ம் வகுப்பு 'ஏசி' ஒன்று இணைத்து இயக்கப்படும்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.