/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.7.50 கோடியில் பள்ளிக்கு கூடுதல் கட்டடம்
/
ரூ.7.50 கோடியில் பள்ளிக்கு கூடுதல் கட்டடம்
ADDED : டிச 16, 2025 04:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எண்ணுார்: எர்ணாவூர் - மாகாளியம்மன் கோவில் தெருவில், மாநகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்படுகிறது. கட்டட வசதி பற்றாக்குறை இருப்பதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, பள்ளியின் தரத்தை உயர்த்த 7.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இரண்டு தளங்கள் கொண்ட கூடுதல் கட்டட கட்டுமான பணியை திருவொற்றியூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சங்கர் நேற்று துவங்கி வைத்தார்.

