/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.4.62 கோடியில் கூடுதல் வகுப்பறை
/
ரூ.4.62 கோடியில் கூடுதல் வகுப்பறை
ADDED : மார் 04, 2024 02:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழிங்கநல்லுார்:சோழிங்கநல்லுார் மண்டலம், 196வது வார்டு, கண்ணகி நகரில் ஒரு தொடக்கப் பள்ளி உள்ளது. மாணவ - மாணவியர் வருகை அதிகரித்ததால், கூடுதல் வகுப்பறை கட்ட, மாநகராட்சி முடிவு செய்தது.
இதற்காக, 2.31 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. அதேபோல், 200வது வார்டு, செம்மஞ்சேரியில் உள்ள துவக்கப் பள்ளியில், கூடுதல் வகுப்பறைகள் கட்ட, 2.31 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
கட்டுமான பணிகள், ஓரிரு நாளில் துவங்கும் என, மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.

