தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/கண்ணகி நகர் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள்

கண்ணகி நகர் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள்

கண்ணகி நகர் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள்


ADDED : மார் 15, 2024 12:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2024 12:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கண்ணகி நகர், சோழிங்கநல்லுார் மண்டலம், 195, 196 ஆகிய வார்டுகளை உள்ளடக்கிய கண்ணகி நகர், எழில் நகர், சுனாமி நகர், 240 ஏக்கர் பரப்பு உடையது. இங்கு, 23,704 வீடுகள் உள்ளன.

தொடக்கப் பள்ளிகளில் 1,500, நடுநிலையில் 400, உயர்நிலையில் 400, மற்றும் மேல்நிலையில் 1,150 மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.

இங்குள்ள பள்ளிகளில், ஆண்டுதோறும் மாணவ - மாணவியர் சேர்க்கை அதிகரிக்கிறது. ஆனால், வகுப்பறைகள் பற்றாக்குறை உள்ளது. இதை போக்கும் விதமாக, மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், கண்ணகி நகரில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் மட்டும், 10 வகுப்பறைகள் உள்ளன. கூடுதல் வகுப்பறை கட்ட, 3.21 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

இதில், மூன்றடுக்கு கட்டடத்தில், 12 வகுப்பறைகள் உடைய கட்டப்பட உள்ளது. இதற்கான, பணிகள் துவங்கி உள்ளன. ஓராண்டுக்குள், பள்ளி கட்டடத்தை கட்டி முடிக்கப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us