/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இ.சி.ஆர்., ஓ.எம்.ஆரில் கூடுதல் எப்.எஸ்.ஐ.,
/
இ.சி.ஆர்., ஓ.எம்.ஆரில் கூடுதல் எப்.எஸ்.ஐ.,
ADDED : ஏப் 08, 2025 01:27 AM
சென்னை, ''இ.சி.ஆர்., எனும் கிழக்கு கடற்கரை சாலை, ஓ.எம்.ஆர்., எனும் பழைய மாமல்லபுரம் சாலை பகுதிகளில், கூடுதல் எப்.எஸ்.ஐ., வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, ஹிந்து சமய அறநிலையத்துறை மற்றும் சி.எம்.டி.ஏ., அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க., மனோஜ் பாண்டியன்: சென்னை மாநகரின் பல இடங்களில், குறிப்பாக மெட்ரோ ரயில் செல்லும் இடங்களுக்கு அருகில், கூடுதல் எப்.எஸ்.ஐ., கொடுப்பதாக அறிகிறேன். சென்னையில் வளர்ந்து வரும் இ.சி.ஆர்., - ஓ.எம்.ஆரில் கூடுதல் எப்.எஸ்.ஐ., வழங்க அரசிடம் திட்டம் உள்ளதா?
அமைச்சர் சேகர்பாபு: இ.சி.ஆர்., - ஓ.எம்.ஆர்., குதிகளில், மத்திய அரசின் வழிகாட்டுதலுக்கு உட்பட்டுதான், கூடுதல் எப்.எஸ்.ஐ., அதாவது மனையின் மொத்த பரப்பில், எத்தனை மடங்கு பரப்பளவுக்கு கட்டடம் கட்டலாம் என்பதற்கு அனுமதி வழங்க முடியும். இது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் அறிக்கை தயார் செய்துள்ளார். வாய்ப்பு இருப்பின், இ.சி.ஆர்., - ஓ.எம்.ஆரில் கூடுதல் எப்.எஸ்.ஐ., வழங்க முயற்சி மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

