/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருமங்கலம் மெட்ரோவில் கூடுதல் 'பார்க்கிங்' வசதி
/
திருமங்கலம் மெட்ரோவில் கூடுதல் 'பார்க்கிங்' வசதி
ADDED : மார் 16, 2025 10:01 PM
சென்னை:சென்னை மெட்ரோ ரயில்களில், நாளுக்குநாள் பயணியர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், அதற்கேற்ப மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனங்களை நிறுத்த வசதிகள் இல்லை. குறிப்பாக, ஆலந்துார், விமான நிலையம் உள்ளிட்ட சில மெட்ரோ ரயில் நிலையங்களில், காலை 10:00 மணிக்கே வாகன நிறுத்துமிடங்கள் 'ஹவுஸ்புல்' ஆகி விடுகிறது. எனவே, முக்கிய ரயில் நிலையங்களில் கூடுதல் வாகன நிறுத்த வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் தற்போதுள்ள வாகன நிறுத்தம் பகுதியில், கூடுதலாக ஒரு தளம் வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாகன நிறுத்தத்தை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை ஆலோசகர் மால்யா நேற்று முன்தினம் திறந்து வைத்தார்.
இந்த புதிய நிறுத்தத்தில் 400 இருசக்கர வாகனங்களை நிறுத்த முடியும். எனவே, மொத்தம் 1,000 இருசக்கர வாகனங்கள் திருமங்கலம் மெட்ரோ நிலையத்தில் ஒரே நேரத்தில் நிறுத்த முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.