ADDED : ஜன 18, 2024 12:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரியான கோவேந்தனுக்கு, இந்திய வெளியுறவு அமைச்சகத்திற்கான சென்னை கிளை செயலகத்தின் தலைமை அதிகாரியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.
சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரியாக, 2021, ஜூலை 27 முதல் பொறுப்பு வகிக்கிறார் எஸ்.கோவேந்தன்.
இவர், சென்னை, கிண்டி, பொறியியல் கல்லுாரியில் படித்து, ஐ.எப்.எஸ்., தேர்ச்சி பெற்று போர்ச்சுகல், பிரேசில், பூட்டான் உள்ளிட்ட நாடுகளில் உள்ள இந்திய துாதரங்களில் பணியாற்றியவர்.
இந்நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் சென்னை கிளைச் செயலகத்தின் தலைமை அதிகாரியாக இருந்த வெங்கடாசலம், பிரிட்டனின் பர்மிங்காமில் உள்ள இந்திய துணைத் துாதரகத்தின் துணை துாதராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த பொறுப்பை, கோவேந்தனுக்கு கூடுதலாக கவனிக்கிறார்.