/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிளாம்பாக்கத்தில் 'ஸ்பேர்' பஸ்கள் கூடுதலாக நிறுத்தம்
/
கிளாம்பாக்கத்தில் 'ஸ்பேர்' பஸ்கள் கூடுதலாக நிறுத்தம்
கிளாம்பாக்கத்தில் 'ஸ்பேர்' பஸ்கள் கூடுதலாக நிறுத்தம்
கிளாம்பாக்கத்தில் 'ஸ்பேர்' பஸ்கள் கூடுதலாக நிறுத்தம்
ADDED : ஜூன் 13, 2025 09:21 PM
சென்னை:கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கூடுதலாக, 'ஸ்பேர்' பேருந்துகளை நிறுத்திவைத்து தேவைக்கேற்ப இயக்க, அரசு போக்குவரத்து கழகங்கள் முடிவு செய்துள்ளன.
சென்னையில் ஏற்படும் நெரிசலுக்கு தீர்வாக, கிளாம்பாக்கத்தில் 88 ஏக்கர் பரப்பளவில் புதிய பேருந்து ரப்பளவில் கட்டப்பட்டு, 2023 டிசம்பரில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
இங்கிருந்து தினமும், 1,400 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இருப்பினும், தொடர் விடுமுறை, பண்டிகை நாட்களில், நள்ளிரவில் போதிய பேருந்துகள் இல்லாததால் பயணியர் அவதிப்படுகின்றனர்.
இதுகுறித்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: கிளாம்பாக்கத்தில் இருந்து தினமும் பயணியரின் தேவைக்கேற்ப பேருந்துகளை இயக்கி வருகிறோம். தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில், இரவு நேரங்களில் திடீரென குவியும் கூட்டத்தால், பேருந்துகள் இயக்குவதில் சற்று தாமதம் ஏற்படுகிறது.
இதுபோன்ற பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், 'ஸ்பேர்' பேருந்துகளை கூடுதலாக நிறுத்த முடிவு செய்துள்ளோம்.
அதன்படி, பண்டிகை, தொடர் விடுமுறை நாட்களில், விரைவு போக்குவரத்து கழகம், விழுப்புரம் மற்றும் கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில், தலா 30 பஸ்கள் வரை கூடுதலாக நிறுத்தி, இயக்கப்படும்.
இதனால், பஸ்களுக்காக, பயணியர் காத்திருக்க வேண்டிய அவசியமும் இருக்காது. கூட்ட அதிகமாக இருந்தால், உடனடியாக பஸ்கள் இயக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.