/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'ஆதி கலைக்கோல்' 3 நாள் பயிற்சி பட்டறை துவக்கம்
/
'ஆதி கலைக்கோல்' 3 நாள் பயிற்சி பட்டறை துவக்கம்
ADDED : செப் 23, 2025 01:35 AM

சென்னை:ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் கலைகளை ஊக்கப்படுத்தும் வகையில், 'ஆதி கலைக்கோல்' என்ற பெயரில் மூன்று நாள் பயிற்சி பட்டறை, சென்னையில் நடக்கிறது.
தாட்கோ சார்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் கலைகளை ஊக்கப்படுத்தும் வகையில், 'ஆதி கலைக்கோல் பயிற்சி பட்டறை - 2025' என்ற தலைப்பில், நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நேற்று துவங்கியது.
இந்த பயிற்சி பட்டறை மூலம், தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள மாணவர்கள் பயன்பெற உள்ளனர்.
மூன்று நாள் நடக்கும் பயிற்சி பட்டறையில், அசாம், பீஹார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடியின சமூகத்தினர் பயன்படுத்தும், பறை, துடி, இரட்டைக் குழல், ஆர்மோனியம், நையாண்டி மேளம், இசை கிண்ணம், கிண்கிணி உள்ளிட்ட இசைக் கருவிகள் அடங்கிய அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், பாரம்பரிய கலைகளான தெருக்கூத்து, பொம்மலாட்டம், கூத்துக் கலை உள்ளிட்ட அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.
பயிற்சி பட்டறையை, துணை முதல்வர் உதயநிதி துவக்கி வைத்து பேசுகையில், ''ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த, கலைஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஓவியர்கள் மற்றும் சமூக நீதி விடுதி மாணவர்கள் என, அனைவரையும் ஒரே அரங்கில் பார்ப்பதில் மகிழ்ச்சி.
''பழங்குடியின சமூக மக்களின் மறைக்கப்பட்ட கலைகளை, இன்றைய தலைமுறையிடையே கொண்டு செல்வதே, இப்பயிற்சி பட்டறையின் நோக்கம்,'' என்றார்.
நிகழ்ச்சியில், அமைச்சர்கள் அன்பரசன், மதிவேந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.