/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குப்பை அகற்றுவதில் நிர்வாகங்கள் திணறல்
/
குப்பை அகற்றுவதில் நிர்வாகங்கள் திணறல்
ADDED : பிப் 10, 2024 12:09 AM
குன்றத்துார், காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் ஒன்றியத்தில் 42 ஊராட்சிகள் அமைந்து உள்ளன.
இதில், சென்னை புறநகரை ஒட்டி, கோவூர், சோமங்கலம், மணிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளின் பெருக்கத்தால், இங்கு குப்பை கொட்டு வதற்கு இடமில்லை. ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளில் குப்பைக் கழிவுகள் கொட்டி எரிக்கப்படுகின்றன.
இதை தடுக்க ஊராட்சிகளில் குப்பை அகற்ற டிராக்டர் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றின் வாயிலாக, குப்பைக் கழிவுகளை அகற்றி வேறு இடத்தில் வைத்து அழிக்க முடியாமல், மாவட்ட நிர்வாகம் திணறி வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.