/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வேளச்சேரியில் அரசு இடத்தை ஆக்கிரமித்து வீடு; அ.தி.மு.க., 'மாஜி' கவுன்சிலர் வீட்டில் ரெய்டு
/
வேளச்சேரியில் அரசு இடத்தை ஆக்கிரமித்து வீடு; அ.தி.மு.க., 'மாஜி' கவுன்சிலர் வீட்டில் ரெய்டு
வேளச்சேரியில் அரசு இடத்தை ஆக்கிரமித்து வீடு; அ.தி.மு.க., 'மாஜி' கவுன்சிலர் வீட்டில் ரெய்டு
வேளச்சேரியில் அரசு இடத்தை ஆக்கிரமித்து வீடு; அ.தி.மு.க., 'மாஜி' கவுன்சிலர் வீட்டில் ரெய்டு
ADDED : செப் 22, 2024 06:46 AM

சென்னை: சென்னை, வேளச்சேரி, ஆண்டாள்நகரில் 1,200 சதுர அடி அரசு நிலத்தை, 2021ல் போலி ஆவணங்கள் வாயிலாக ஆக்கிரமித்து, வீடு கட்டியதாக, 178வது வார்டு முன்னாள் கவுன்சிலரும், அ.தி.மு.க.,வின் வேளச்சேரி மேற்கு பகுதி செயலருமான மூர்த்தி மற்றும் அவரது மனைவி சுதா மீது, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், புகார் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு உத்தரவிட்டனர்.
விசாரணையில், மூன்று மணி நேரத்தில் பட்டா மாறுதல் செய்யப்பட்டு நிலம் அபகரிக்கப்பட்டதும், அதிகாரிகள் அதற்கு லஞ்சம் பெற்றதும் உறுதியானது.
இதையடுத்து, அ.தி.மு.க., பிரமுகர் எம்.ஏ.மூர்த்தி, அவரது மனைவி சுதா, வேளச்சேரி தாசில்தாராக பணியாற்றி, தற்போது அம்பத்துார் சிறப்பு தாசில்தார் - 2 ஆக இருக்கும் மணிசேகர், 43.
சர்வே துணை இன்ஸ்பெக்டராக பணியாற்றி, தற்போது கோவை மாவட்டம் சூலுாரில் பணியாற்றும் லோகநாதன், 37, ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும், கள சர்வேயராக பணியாற்றி, தற்போது மாம்பலம் சர்வே இன்ஸ்பெக்டராக இருக்கும் சந்தோஷ்குமார், 37; மூத்த வரைபட ஊழியராக பணியாற்றிய ஸ்ரீதேவி, 46 ஆகிய ஆறு பேர் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில், வேளச்சேரி பரணி தெருவில் உள்ள சிறப்பு தாசில்தார் மணிசேகரன் வீடு, மேற்கு மாம்பலம்சந்தோஷ்குமாரின் வீடு, திருவல்லிக்கேணியில் ஸ்ரீதேவி வீடு, அ.தி.மு.க., பகுதி செயலர் மூர்த்தியின் வேளச்சேரி வீடு, கோவை வடகுபாளையத்தில் உள்ள லோகநாத் வீடு என, ஐந்து இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர்.
நேற்று காலை 8:30 மணிக்கு வேளச்சேரி மூர்த்தி வீட்டை போலீசார் சோதனையிட்டனர். மாலை 4:00 மணி வரை சோதனை நடந்தது. அங்கு கைப்பற்றிய ஆவணங்களின் அடிப்படையில், மூர்த்தியிடம் விசாரணை நடத்தினர்.